உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சோழனடு என்பதனைச் சோனடு என்பது மரூஉ வழக்கு எனவும் கூறுவர் இளம்பூரணர். தத்தமக்குரிய வாய்பாட்டா ன்ன்றிப் பிற வாய்பாட்டாற் கூறுதல் வழுவாயினும் அமைகவென மரபு வழுவமைத்தவாறு? எனக் கருத்துரைப்பர் சேவைரையர். உலகவழக்கில் சிதைந்தும் சிதையாதும் தன்னியல்பிற் பொருந்தி நடப்பன வெல்லாம் வழக்காறு எனக் கொண்ட இளம்பூரணர் கருத்தினை யுளங்கொண்ட பவணந்தி முனிவர், அவ்வழக்காற்றினை இலக்கண முடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூவகையாகப் பகுத்து இம்மு ன்றுடன் முற்குறித்த தகுதிவழக்கின் பகுதிகளா கிய இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி என்னும் மூன்றினே யும் கூட்டி, 267. இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉ வென் ருகும் மூவகை யியல்பும் இடக்க ரடக்கல் மங்கலங் குழுஉக்குறி எனுமுத் தகுதியோ டாரும் வழக்கியல். எனச் சூத்திரஞ் செய்தார். இலக்கண நெறியால் வருவதும், இலக்கண மன்றெனினும் இலக்கணமுடையது போல அடிப்பட்ட சான்றேரால் வழங்கப் பட்டு வருவதும், இலக்கணத்திற் சிதைந்து வருவதும் என இம்மூன்று வகையானும் வரும் இயல்பு வழக்கு, இடக்கரடக்கிச் சொல்லுவதும், மங்கல மரபினுற் சொல்வதும், ஒவ்வொரு குழுவிலுள்ளார் தத்தம் குறியாக இட்டுச் சொல்லுவதும் என்னும் இம் மூவகைத் தகுதி வழக்கினேடுங் கூட, வழக்கு நெறி ஆறுவகைப்படும்?? என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். (உ-ம்) நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், மக்கள், மகன் மகள் என்றற் ருெடக்கத்தன இலக்கணமுடையன. இல்முன்