உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జో தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

வழக்காதலின் உரையிற் கொண்டமைக்கப்பெற்ற சேரிமொழி என்பதும் தெளிதலெளிதாம்.

இனி, புறனே' என்றது உள்ளுணர்வு சுட்டும் புறக் குறியை தத்தம் நிலையில் தனித்தனிக்குறியால் புறத்தே புலனா காது கருத்தளவில் வகுத்தெண்னும் எண்ணான்கு பொருளி னின்றும், புறத்தே ஒவ்வொரு குறிக்கு நானான்காய்த் தொக்குப் புலனாகும் மெய்ப்பாட்டு வகையைப் பிரித்தலின், புறனே என்பதின் ஏகாரம் பிரிநிலை: அன்றி இசைநிரப்பும் அசை எனினும்

'எண்ணான்கு பொருளும் நானான்கென்ப' எனவே 'எண்வகை' என்பது பெறப்படு மாதலின், கண்ணிய புறனே நானான்கு" என இடைப்புணர்த்துரைப்பானேன் ? எனின், கூறுதும். உள் உணர்ச்சியளவில் தனிப்பிரித்து ஒருங்கெண்ணப் படும் முப்பத்திரண்டு பொருளும் புறத்தே மெய்ப்பாடாய்ப் புலனாதல் கொண்டே அறியப்படுதலானும், அவ்வாறு புலனாங்கால் அவைதணித்தனியே எள்ளிற்குறி இளமைக்குறி பேதைமைக் குறி மடமைக்குறி என்றொங்வொன்றும் வெவ்வேறாய்த் தனக் குரிய தனிக்குறியாற் றோன்றாமல், நந்நான்காய்ப் பண்ணை கூடி தகை-அழுகை-இ னி வ ர ல்-ம ரு ட் ைக-அச்சம்-பெருமிதம்வெகுளி-உவகை எனும் மெய்ப்பாடு எட்டுவகையால் மட்டும் தோன்றுதலானும், இவ்வியல் நெறி குறித்தல் வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க. இன்னும் இச்சூத்திரம் சுட்டுவது இதுவே வென்பது, பின்னும் செய்யுளியலில் தொல்காப்பியரே அதன் உறுப்பாம் மெய்ப்பாட்டின் தன்மையை விளக்கியபின் அதை கடுத்து 'எண்வகையியனெறி பிழையாதாகி, முந்துறக் கிளந்த முடிவினததுவே' எனக் கூறுதலானும், அதன் கீழ்ப் பேராசிரியரும் "மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே இது; அவை தந்தான்காம்' என உரைப்பதானும் தேறப்பெறும்.

இனி, என்ப' என்றது பிற சூத்திரங்களிற்போல இயற்றமிழ்ப் புலவர் கொண்ட அடிப்பட்ட தமிழ்ச்செய்யுள் மரபீதுவென ஈண்டுச் சுட்டுவதன்றி, யாதொரு வேறு முதனும் இம் அதன் கொள்கையும் குறிப்பதன்று. இச்சூத்திரப் பொருள் இதுவே யென்பது இதன்கீழ் இளம்பூரணர் தரும் குறிப்பானும் தெளிவாகும். அவர் குறிப்பாவது, "முப்பத்திரண்டாவன: