பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


ஆராய்ச்சிகளைச் செய்திட ஒரு விவசாயப் பண்ணையைச் சொந்தமாக அமைத்தார். 40 ஏக்கர் நிலத்தில் அந்தப் பண்ணை உருவானது. என்னென்ன மரம், செடி, கொடிகளையும், மற்ற தாவர வகைக ளையும் அந்தப் பண்ணையில் வைத்து உருவாக்க முடியுமோ அவை அனைத்தையும் அங்கே வைத்துப் பாதுகாத்தார் நாயுடு அவர்கள்.

போத்தனுசரில்
விவசாயப் பண்ணை!

இந்த விவசாயப் பண்ணையில் அவர் செய்த ஆராய்ச்சிகள் ஏராளம். அவற்றுள் சில வெற்றிகளையும் சில தோல்விகளையும் விளைவித்தன. என்றாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், மேற்கொண்டு பணம் செலவழித்து அந்தப் பண்ணையை காண்போர் வியக்கும் வண்ணம் நாயுடு வளர்த்து வந்தார்.

அந்தப் பண்ணையில் திரு. நாயுடு 1941-ஆம் ஆண்டு வாக்கில், முதல் ஆறு ஆண்டுகள் இடைவிடாமல் பல சோதனை களைச் செய்தார். பருத்தி, சோளம், கேழ்வரகு, பப்பாளி, ஆரஞ்சு, வாழை, காலி பிளவர் போன்ற பயிர்களை அவர் அங்கே ஆராய்ந்தார். அதற்கான மருந்துப் பொருட்களை ஊசி மூலமாக அந்தச் செடிகளின் வேர், தண்டு, பழம் ஆகியவற்றுள் பேட்டார். அதன் பலன்களை இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் சுருக்கமாகப் படித்தீர்கள். இப்போதும் சற்று விரிவாகவே அவற்றை அறிவோம். பருத்திப் பயிர் புலன்!

பருத்தி பயிர் சாதானமாக மூன்றடி முதல் நான்கு அடிகள்தான் வளரும். ஆனால், ஜி.டி. நாயுடு பயிரிட்ட பருத்திப் பயிர், பத்து அடி முதல் பதினைந்து அடி வரை வளர்ந்தது என்றால் இதுவே ஒரு விந்தைதானே!

சாதாரண பருத்தி என்ன விளைச்சலைக் கொடுக்குமோ, அதைவிட நாயுடு அவர்களின் பருத்தி ஐந்து மடங்கு பலனை விளைச்சலாகக் கொடுத்தது.

சாதாரணமாக, மற்ற விவசாயிகள் பயிரிடும் பருத்தி பயிர் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்ந்து பலனைக் கொடுக்கும். நாயுடு