உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் Լ-. சே. கார்வே T. L. இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கிரும். இவர் அந்த இளம் பருவத்தில் ஒரு முறை அரசாங்கத் தேர்வின்பொருட்டுத் தம் ஊரிலிருந்து சுமார் 5ான்கு மைல் தொலைவில் உள்ள ஊருக்குப் பெரிதும் துன்புற்றுச் சென்ருர். இவரோடு வேறுசில மாணுக்கர்களும் சென்றிருந்தார்கள். அந்தத் தேர்விற்குவேண்டிய வயசும் இவருக்கு அப்போது ஆகியிருந்தது. இவர்தம் இளமைத் தோற்றத்தைப் பார்த்துத் தேர்வுத்தலைவர்கள் இவர் கூறிய வயசின் கணக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. இவருடன் சென்ற பிற மாணுக்கர்கள் தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டனர். தம் வயசைத் திடமாகக் கூறி அவர்களே கம்பவைக்க இயல்ாமல் இவர் மிக்க துயரத் தோடு தம் ஊருக்குத் திரும்பினர். அதனுல் இவருக்கு ஒர் ஆண்டு வீளுய்க் கழிந்தது. - பிறகு இவர் ஆங்கிலக்கல்வி கற்று அதிலும் தேர்ச்சி பெற விழைந்தார். மூருட் பதியில் இருந்த ஒரு செல்வர் தம் மைந்தனுக்குத் தம் வீட்டிலேயே ஆங்கிலம் கற்பிக்க ஒர் ஆசிரியரை ஏற்படுத்தினர். 15ம் பெரியார் கார்வே அந்தச் சிறுவைேடு சேர்ந்து கற்று ஆங்கிலக்கல்வியில் சிறிது பழக்கம் பெற்ருர் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மேல்வகுப்புமானுக்கர்களுட் சிலர் விடுமுறைக்காலங்களில் முருட் பதிக்கு வரும்போது நம் பெரியார் அவர்களிடம் சென்று தமக்குச்சிறிதும் விளங்காதவைகளையெல்லாம் வினவித் தெரிந்துகொள்வார். H நம் பெரியாருக்குப் பதின்ைகாம் வயசிலேயே திருமணம் நடந்தேறிவிட்டது. இவர் தந்தையாரோ