வாழ்க்கை வரலாறு
19
சிறுவன் ஜவஹரை ‘வெளுவெளு வென்று’ வெளுத்து வாங்கிவிட்டார் உடலின் வேதனையாலும் உள்ளத்து வேதனையாலும் குறுகிப்போன ஜவஹர் தாயைச் சரணடைந்தார் உடல் நோவு தீருவதற்குப் பல நாட்கள் சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாயிற்றாம்.
இந்த நிகழ்ச்சியினால் ஜவஹருக்குத் தந்தை மீது ஆத்திரமோ வெறுப்போ ஏற்பட்டதில்லை. தந்தை தனக்கு விதித்த தண்டனை சற்று அளவுக்கு அதிகமானது என்றாலும் நியாயமான தண்டனையே என்று தான் அவர் நம்பினார். தந்தையிடம் அவர் கொண்டிருந்த அன்பும் வியப்பும் அச்சமும் குறையவே இல்லே. தாய் சொரூப் ராணியிடம் அவருக்குப் பயம் ஒருநாள் கூட எழுந்ததே இல்லை. அவளுடைய பாசமும் அவள் காட்டிய பரிவும் செல்லமும் காரணமாக, ஜவஹர் அவளிடம் தன் இஷ்டம்போல் நடந்து தனது காரியங்களைப் பிடிவாதமாகச் சாதித்துக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தார். தந்தையிடம் சொல்லத் துணியாத எண்ணங்களையும் ஆசைகளையும் நேரு தாயிடம் கூறி ஆறுதல் பெறுவது வழக்கமாம்.
சிறு பிராயத்தில் நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவருக்கு ஆறுதலும் உற்சாகமும் காட்டி வந்த மற்றொருவர் முன்ஷி முபாரக் அலி எனும் பெரியார் ஆவர். நல்ல நிலைமையில் வாழ்ந்த அவரது குடும்பம் 1857-ஆம் ஆண்டுப் புரட்சியால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததாம். அவருக்கு எதிர்ப்பட்ட நஷ்டங்களும் அனுபவமும் முபாரக் அலியை இளகிய உள்ளத்தவராகவும், ஜனங்களின் அனுதாபியாகவும், குழந்தைகளிடம் பிரியம் காட்டுகிறவராகவும் மாற்றிவிட்டனவாம். சிறு-