28
நம் நேரு
கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலேயில் தான் கிடைக்கும் என்று கருதினார் அவர். ஆதலால் தந்தைக்கு எழுதி அங்கீகாரம் பெற்று, நேரு கேம்பிரிட்ஜ் டிரினிட்டி காலேஜில் சேர்ந்தார். ஹாரோவில் இரண்டு வருஷங்களும், கேம்பிரிட்ஜில் மூன்று வருஷங்களும் பயிற்சி பெற்றார் அவர்.
வாழ்க்கையை மனோகரமானதாக அமைத்துக்கொள்ள வேண்டும்; வாழ்வின் சகல இன்பங்களையும் அனுபவித்து வாழ்வதற்குக் கிட்டிய ஒவ்வொரு நாளையும் இனிய பொழுதாகப் பயன்படுத்திக் கலைமய வாழ்வு வாழ வேண்டும் என்ற நினைப்பு அவருக்குக் கல்லூரி நாட்களில் மேலோங்கி இருந்தது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த சரித்திரப் பிரசித்தமான சம்பவங்களைப் பற்றிய செய்திகளோ அவரையும் ஆசை காட்டி அழைப்பதாக இருந்தன. இப்படி இருவேறு ரக எண்ணக் குழப்பம் அலைக்கழித்த போதிலும் நேருவின் கல்லூரி வாழ்க்கை இனிமை நிறைந்தே விளங்கியது.
கேம்பிரிட்ஜில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இந்தியர் பலரும் கூடி ‘மஜ்லீஸ்’ என்றொரு சங்கம் அமைத்திருந்தனர். அங்கு அடிக்கடி இந்தியப் பிரச்னைகளைத் அலசி ஆராய்ந்தனர். காரமாகப் பேசிச் சூடாக விவாதித்தனர். ஆனால் எல்லாம் ஏதோ நடிப்பு போலவும், பிரிட்டிஷ் பார்லிமெண்ட் நிகழ்ச்சிகளைக் காப்பி அடித்துக்களிப்பது போலவுமே தோன்றும். அங்கு ஒரு வித் இருந்ததாம். பல மாத காலம் ஒரு தடவைகூட மேடை ஏறிப் பேசாமல் வாய்மூடி மெளனியாக வந்துபோகிற அங்கத்தினர் குறித்த ஓர் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியது அவசியமாம். ஜவஹர்-