உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

நற்றிணை தெளிவுரை


அதனைக் கேட்டாளாகிய அவளும், தான் செய்தகுறியிடத்தே என்னைக் கொண்டு சென்று, இனிய சொற்களைக் கூறி, என்னையும் தெளிவித்தனள். கலைமானைப் பிரிந்து செல்லும் அதன் இளைய பெண்மானைப்போல, என்னைவிட்டு வேறாகப் பிரிந்து நீங்கி, மிகுதியான மூங்கில்கள் உயர்ந்த தன்னுடைய சிறுகுடி நோக்கியும் அவள் சென்றனள். அப்படிச் சென்ற போகவிடுத்த அவளது முதுகுப்புறத்தை நோக்கியபடி

என்

எதனாலும் நெஞ்சமானது, அவளை நினைத்தலை இனிக் கைவிடாது. இனி, யான்தான் யாது செய்வேனோ? சொற்பொருள் : தளிர்-இளந்துளிர். தழை-தழையுடை. குளிர்-கிளிகடி கருவி. வியன் புனம் - தினைப்புனம்; தகப்பனின் வளமையைக் குறித்தது. ஏற்பட-காலையில். குறுஞ்சுனை - குறுகலான கனை; 'குறுகல்' என்றது, சுனையின் மேற்பரப்பை. சுனை - மலைக்கண் மழைநீர் தங்கிநிற்கும் பள்ளமான இடம். குவளை - நீர்க்குவளைப் பூ. புணரிய-தலைக் சோலை. கூட்டம் வாய்க்கப்பெற்ற. சாரல் - மலைப்பகுதிச் ஆடுகம் - கூடிவிளை படுதற்கு. மேவல் - விரும்புதல். இயலும்- ஒழுகும். நெஞ்சு நெஞ்சம் தன் கவலை தீர்ந்து களிப்பெய்த. குறிவயின் - குறியிடத்தில். குறியிடம்-இருவரும் சந்திக்கக் கருதிக் குறிப்பிட்ட இடம். ஏறு -மானேறு. கொடிச்சி - குறக்குலப் பெண், பூங்கொடி போன்றவள் என்பது சொற்பொருள்.

உண

·

விளக்கம்: 'தளிர்சேர் தண்தழை' என்றது பெரும் பாலும் அசோகந்தளிர் போன்றவையே தழையுடைக்குப் பயன்பட்டு வந்ததனால்; 'தளிரும் பூவும் சேர்ந்த தண்ணிய தழையுடை' எனலும் பொருந்தும். 'எற்பட' என்பதனை 'மாலைநேரம்' எனவும் சிலர் கொள்வர்; ஆயின் புனத்து வருதலும் சாரற்கண் ஆடுதலும் பிறவும் மாலைநேரத்து நிகழக்கூடாமையின் காலைநேரமாகக் கொள்ளப்படுதலே சிறப்பு ; படுதல்-தோன்றுதல். 'குறிவயின்' என்றது, தலைவி யால் 'இன்னவிடத்துக்கு இன்ன போதிலே நீயிர் வருக’ எனச் சுட்டப்படும் இடத்தை; 'களஞ் சுட்டு கிளவி கிளவியது ஆகும்' என்பது விதி - (தொல்.பொருள். சூ120). முதற் சந்திப்பு புனத்திடத்தும், அடுத்து மலைச்சாரலிலும்,பின் குறியிடத்தும் இவர்கள் களவிற் சந்தித்துப் பழகி நட்புச் செய்தனர் என்று கொள்க. 'ஏறுபிரி மடப்பிணை கடுப்ப? என்றது, தங்கள் பழைய உறவைப் பற்றிய உண்மையை உரைத்ததோடு, அவளும் தன்னைப் பிரிந்து, பிரிவைத் தாங்கி வாழ்ந்திராள் என்பதையும் தோழிக்கு உணர்த்தியதாம்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/24&oldid=1637158" இலிருந்து மீள்விக்கப்பட்டது