உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

நற்றிணை தெளிவுரை



தெளிவுரை : அருவிகள் ஆரவாரத்துடன் வீழ்ந்தபடியே யிருக்கின்றதான பெரிய மலைப்பக்கத்தே, ஆளியாகிய நல் விலங்கானது இரைகுறித்து வேட்டையாடுவதற்கு எழும். கொள்ளுதல் வல்ல நகங்களையும், அழகிய பொறிகளையு முடைய புலியைக் கொன்றொழித்த, மிகவும் கூர்மையும் உயர்வான அமைப்பும் கொண்டதான் வெண்ணிறக் கோட்டையுடைய வலிய களிற்றினைக் கொன்று, முழைஞ்சிற்கு அதனை இழுத்துக்கொண்டும் செல்லும். நீ செல்லுதற்குரிய வழியானது அத்தகைய புகுதற்கரிய காடு என்றும் கருதாயாயினை!

தன்

குவளை போலும் மையுண்ணும் கண்களையுடைய இவள், இவ்விடத்தே நின்னை நீங்கித் தனித்திருக்க, நீயும் ஆள்வினைப் பொருட்டாக அகன்று போகின்றனை! அங்ஙனமாயின்,

தோட்டப் புறத்துள்ள வளைவான முட்களைக் கொண்ட ஈங்கைச் செடியின் நெடிய அழகிய இளந் தளிரானது, நீர்மிகுதியுடையதாக வேகத்தோடு பெய்யும் பெருமழையால் நனைந்தபோது தோன்றும் அழகிய நிறத் தைப் போன்றதான், இவளது மேனியின் மாந்தளிர்க் கவினானது, நின்னோடு, தானும் இவளைவிட்டு அகன்று போய் விடுமே!

சொற்பொருள்: பெருவரை அடுக்கம் - பெரிய மலையிடத் துள்ள அடுக்கடுக்காக விளங்கும் சாரற்பகுதிகளுள் ஒரு பகுதி. கோள்- கொள்ளுதல். பூம்பொறி - அழகிய பொறிகள். உழுவை - புலி. வைந்நுதி - கூரிய நுனிப்பகுதி. ஏந்து-மேல் நோக்கி உயர்ந்து. வயம்-வலிமை. ஈர்க்கும் - இழுத்தபடி யிருக்கும். துன்னல் - நெருங்கல். ஆள்வினை - செயன்முயற்சி. படப்பை தோட்டக்காற் பகுதி. கொடுமுள் - வளைந்தமுள். ஈங்கை - ஈங்கைச்செடி; வேலியில் வைக்கப்படுவது. மாமைக் கவின்-மாந்தளிர் போன்று மென்மையும் ஒளியும் பளபளப் பும் கொண்ட அழகு. ஆய் நிறம் - அழகிய நிறம்.

விளக்கம்: கானமோ நெருங்குதற்கு அரியது; கொடு விலங்குகளையுமுடையது; அதனூடே செல்ல நினைத்தால் நினக்கு யாதாகுமோ? அதுவும் இனிதாகக் கூடியிருக்கும் நின் மனைவியை நலமிழந்து மெலிவடையச் செய்துவிட்டுப் போவதாற் பெறும் பயன்தான் யாதோ? நீ மீண்டும் வரும் வரை இவள்தான் நலன் அழியாதிருப்பாளோ? என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/26&oldid=1640750" இலிருந்து மீள்விக்கப்பட்டது