13
தாலி கட்டி வைக்கும் வழக்கம் தொலைய வேண்டும்' கல்யாணம் செய்ய விரும்புகிறவன் தனக்கு வருகிற மனைவி இப்படி இப்படி யிருக்க வேணும் என விரும்புவது இயல்பு பெண்ணின் பண்பும் அதுவே இவர்களுக்குத் துணைபுரியும் கல்யாணக் கழகங்கள் ஸ்தாபிதமாக வேண்டும்.
எல்லாப் பொருத்தங்களையும், வாழ்வின் தன்மைகளையும் காட்டும் சித்திரம் என நம்பப்படும் ஜாதகக் கட்டங்களைக் கிழித்தெறிந்து விட்டு, ஒவ்வொருவரின் உண்மையான குணசித்திரப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் பெயரை, தங்கள் விருப்பு வெறுப்புகளே, தங்கள் குணங்கள் குறைகளே, தங்கள் ஆசை, கனவுகளே, தாங்கள் விரும்புகிற எதிரினத்து நபர் எப்படி யமைய வேணும் என்கிற கருத்தை ஒளிவு மறைவின்றி கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவரவர், போட்டோவும் இணைக்கப்பட வேணும். இவை ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
கழகத்தினர் எல்லா மனுக்களையும் கவனித்து வருவர் ஒரு மனுதாருக்கு ஏற்று ஜோடி என்று தாம் கருதுகிற மற்றொரு மனுவினரை சந்திக்கச் செய்வது அவர்கள பொறுப்பு. மூன்று நான்கு முறைகள் கழக நிர்வாகியின் முன்னிலையிலும், பிறகு கழகத் தோட்டங்களில் தனிமையிலும் சந்தித்து எண்ணங்களைப் பரிமாறி, பாஸ்பரம் புரிந்து கொள்ள உதவி புரியப்படும். தபால் மூலமும் நட்பு வளர உதவலாம். இப்படி மனம் விட்டுப் பழகுவதில் பரஸ்பரம் ஒருவாறு உணர்ந்து தங்களைப் பற்றி தாங்களே தீர்மானிக்க இயலும், அவர்களாக இஷ்டப்பட்டு மணம் புரிகிற போது, பொருந்தா