உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

நல்வழிச் செல்வம்

நல்வழிச் செல்வம் முன் நாட்களில் செய்த நற்செயல்கள், திச் செயல்களின் விளைவே, இந்நாளிலும், பின்நாளிலும் முன்வந்து நிற்கும். நல்வினை செய்தற்குரியது. விேனை நீக்குதற்குரியது. எண்ணிப் பார்க்கும்பொழுது, எல்லா சமயத்தினருடைய முடிவும் இதுவாகவே இருந்துவரும். ஆகவே, தீதை ஒழி: நன்மையைச் செய்! (31)

 இப் பரந்த உலகில், ஆராய்ந்து பார்க்கும்பொழுது சாதி இரண்டொழிய வேறில்லையென நன்கு தெரிகிறது. நீதி வழுவாத நெறிமுறையில் நின்று, பிறருக்கும் வழங்கி வாழ்பவன் மேற்குலத்தான் எனவும், அவ்வாறு வாழாதவன் கீழ்க்குலத்தான் எனவும் ஆகின்றனர். அற நூல்கள் அனைத்தும் இதையே கூறுகின்றன.                 (32)
   இந்த உடம்பானது துன்பங்களைப் போட்டு நிரப்பி வைக்கும் பை போன்றது. நிலையில்லாத இவ்வுடம்பை நிலையானது என எண்ணி ஏமாந்துவிடாமல், நல்ல வழியில் விரைந்து நடந்து, நல்ல நெறியில் உயர்ந்து நில்லுங்கள். அவ்விதம் செய்தால், நல்லறிஞரிகளைச் சேர்ந்து வாழும் நற்பேறு உங்கட்குக் கிடைக்கும்.                (33)
  எதற்கும் உற்ற காலம் வந்தபோதல்லாமல், எவரும் எதையும் எண்ணி முடிக்க இயலாது. கண்ணற்ற ஒருவன் கைத்தடியை மாமரத்தின்மீது வீசியதும் மாங்காய் உதிர்வது போல, ஆங்காலம் வந்துவிட்டால் அனைத்தும் அப்பொழுதே முடிந்துவிடும்.            (34)
 வரத் தகாதவைகளை வருந்தி அழைத்தாலும் வாராது. வருபவைகளைப் போ' என்று சொன்னாலும் போய்விடாது. இதனை உணர்ந்து கொள்ளாமல் ஏங்கியிருந்து, நெஞ்சத் தைப் புண்ணாக்கிக்கொண்டு, வருந்தி வருந்தி வாழ்வதே மக்களின் தொழிலாக இருந்து வருகிறது.         (35)