உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி 37

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றலின் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ-பைந்தொடீஇ நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கணி. (81)

இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய் ததிர் வளையாய் பொங்கா தழற் கதிரால் தண்ணென் கதிர்வரவால் பொங்கும் கடல்.(82)

நல்லோர் வரவான் நகைமுகங்கொண் டின்புறீஇ அல்லோர் வரவான் அழுங்குவார்-வல்லோர் திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா விருந்தும் சுழல்கால் வர. (83)

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவர் என்க-தெரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். (84)

ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க-நீக்கு பவரார் அரவின் பருமணிகண் டென்றும் கவரார் கடலின் கடு. (85)