உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதம்பம் 33

இந்த வாய்பாடு எப்படி இருந்தாலும் பத்துச் சாலுக்கு ஒரு தடவை கூறும் கணக்கு மாத்திரம் அநேகமாக எங்கும் ஒரேமாதிரி இருக்கும். ஒரு பதியா லொண்ணு. இருபதியா லொண்ணு, முப்பதியா லொண்ணு' என்று நூறு வரையில் வரும். ஒருபதால் ஒன்று, இருபதால் ஒன்று - என்பவற்றின் கொச்சை உருவம் அவை என்று தோன்றுகிறது. இப்படி நூறு சால் இறைத் தால் ஒரு ப ரி ய .ெ ம ன் று சொல்வார்கள். ஆயிரத்துக்குப் பத்துப் பரியம். ஒவ்வொரு பரியத் திற்கும் தனித்தனியே வேறு வேறு பாட்டுக்களைக் கற்றுக்கொண்டு சொல்பவர்களும் உண்டு. இப்போது உள்ள டாட்டுக்களைப் பார்த்தால் பல அடிகள் குறைந்து போய் வார்த்தைகள் சிதைந்து இருக்கும்.

来 泷 를 安

நாடோடிப் பாட்டுக்களில் முக்கியமாக ஒன்றைக் காண்லாம். ஒரே விஷயத்தைப் பல வகையாகத் திருப்பித் திருப்பிச் சொல்வது மற்றப் பாடல்களில் குற்றமாகலாம். ஆனல் நாடோடிப் பாட்டில் அப்படி அமைந்திருப்பது முக்கிய லட்சணங்களுள் ஒன்ருகும்.

துரியோதனன் தன்னுடைய சேனைகளுடன் புறப்பட்டு வருகிருன், சேனை மிகுதியினல் அண்டம் கிடு கிடென் கிறது. பூமி நடு நடுங்கப் போர் மன்னர் போகும்போது தாள் எழும்புகிறது. அதை நாடோடிப் பாட்டு வருணிப் பதைப் பாருங்கள்: -

கருந்துள்ள் எழும்பியது. -

கண்ணை மறைக்கிறது செந்தூள் எழும்பியது.

திசையை மறைக்கிறது மண்தூள் எழும்பியது . - - வானம் மறைக்கிறது! நா. 3 -