உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

'இந்நாட்டில், நன்றாயிருப்பவர்கள்தான், மருந்து குடிக்கவேண்டும் போலும்’ என்று எங்கள் அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்டே நடந்தோம். மீண்டும் தங்கும் கூடத்திற்குச் சென்று காத்திருந்தோம்.

சில வினாடிகளில், கல்வி இயக்குநர் எங்களைச் சுங்கச் சாவடிக்கு அழைத்துக்கொண்டு போனார். அங்குள்ளவரிடம் 'துாதுக்குழு’ என்று எங்களைக் காட்டினர். 'டெலிகேஷனுக்கு' மட்டுமே, சோவியத் நாட்டில் மரியாதை சொந்தப் பயணிகள், எவ்வளவு செல்வர்களாயினும் தனிக் கவனம் கிடை யாதாம். சுங்க அதிகாரி, எங்கள் பெட்டிகளே அடையாளம் காட்டச் சொன்னார். காட்டினுேம் நொடிப்பொழுதில் சுங்கச் சடங்கு முடிந்தது. நுழைவுச் சீட்டையும் சுங்கச் சீட்டையும் ஒவ்வொருவரிடமும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

எல்லோருமாக டாக்ஸிகளில் ஏறி, சில மைல் துாரத்தில் உள்ள டாஸ்கண்ட் நகருக்குப் போய்ச் சேர்ந்தோம். அவ்வூரில் பெரிய ஒட்டல் டாஸ்கண்ட் ஒட்டல். அங்கே, டெலிகேஷன்கள் தங்குவது வழக்கம். நாங்கள் ஒட்டலே அடைந்ததும் எங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டார்கள்.