உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


பக்கத்தில் ஒடும் ஆற்றிலிருந்து, தண்ணிர் அதற்குள் வர வழி வைத்திருக்கிறார்கள்; அதில் இளைஞர்கள் படகோட்டிப் பழகுகின்றனர். பூங்காவில் இளப்பாறிப் படிக்கின்றனர். பூங்கா, நெஞ்சை அள்ளும் வகையில் அழகோடும் துாய்மையோடும் இளைஞர்களுக்கு நல்ல பொழுது போக்குக்குரிய இடமே இளங் கம்யூனிஸ்ட் ஏரி' என்று நினைக்காதீர். உடற் பயிற்சியும் தொழிற் பயிற்சியும் பெறும் இடமாகவும் அதை அமைத்துள்ளனர்.
அந்த ஏரியைச் சுற்றி சிறுவர் இரயில் அமைத்திருக்கின்றனர். அதன் நீளம் கிட்டத் தட்ட மூன்று கிலோமீட்டர்கள். அது 'ஞாயிறு நிலையத்தில்' தொடங்குகிறது. 'பயணியர் நிலையத்தில்' முடிகிறது. சிறுவர் இரயில் என்றதும் பொம்மை இரயில் என்று நினைத்து விட்டீர்களா? மெய்யான இரயில். ஆட்களே ஏற்றிச் செல்லும் இரயில் நேரா நேரத்தில் செல்லும் இரயில். தடம் புரளாமல் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடையும் இரயில்.
எங்களை அந்த ஏரிக்கு அழைத்துக்கொண்டு போவது, சிறுவர் இரயிலைக் காட்டவே. இந்த இரயில் பள்ளிக்கூட மாணவர் மாணவிகளால் ஓட்டப்படுகிறது என்று சொன்னார்கள். ஆகவே பார்க்க விரும்பினோம். ஞாயிறு நிலையத்தை அடைந்ததும். ஒர் இரயில் ஆயத்தமாக இருந்தது. நிலையம் துய்மையாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. அழகாக அலங்கரித்து வைத்திருந்தனர்.