உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைகுனிந்து புத்தகத்தைப் பார்க்க

ஆரம்பித்தான்.

அந்த ஆசிரியர் மறுபடியும் பிள்ளை களைப் பார்த்து, " மாணவர்களே, நான் இப்போது அதை உங்களுக்கு விளக்க மாகக் கூறுகின்றேன்; நான் சிறிது நேரத்திற்கு முன்பு என் அறையில் கைக் கடிகாரமும், பவுன்டன் பேனாவும் வைத்துவிட்டு வெளியே சென்றேன்; திரும்பி வருவதற்குள் அவை மாயமாய்ப் போய்விட்டன. அவைகளை எடுத்தவன் இப்போது கொடுத்துவிட்டால் நல்லது; அதை எடுத்தவன் 'நான்தான்' என்று சொல்லிவிட்டாலும் நலமே. அவனை நான் அதிகமாகத் தண்டிக்கமாட்டேன். அல்லையேல் அவன் இந்தப் பாடசாலையை விட்டு நீங்குவதோடு போலீசாரிடமும் ஒப்புவிக்கப்படுவான்" என்றார்.

இவ்வாறு ஆசிரியர் சொல்லும் போது நாராயணன் ஆச்சரியமும், வருத்தமும் கலந்த முகத்தோடு அந்த ஆசிரியரையே பார்த்துக்கொண்டு இருந்தான். மற்றச் சிறுவர்களும்36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/39&oldid=1338329" இலிருந்து மீள்விக்கப்பட்டது