உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாற்பெரும் புலவர்கள்: 'யான் முன்பு வஞ்சித்துக் கவர்ந்து கொண்ட சிலம்பு என்னிடத்தே உள்ளதென்று அரசனுக்குத் தெரியா முன்னரே, அதனோடு ஒத்த சிலமபைக் கொணர்ந்த இப்புதியவனால் என் மீதுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்ளலாம்" என்று. எண்ணிக் கொண்டான். r பொற் கொல்லன். அரண்மனையை நெருங்கி னான். அவ்வமயம் பாண்டியன் நெடுஞ்செழியன் வெகுவிரைவாக அந்தப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். பொற் கொல்லன் அரசனைப பணிந்து, "அரசரே! கன்னக்கோல் முதலியன இன்றி அரண்மனையில் இருந்த சிலம்பைத் திருடியவன் அடியேனுடைய வீட்டில் அச் சிலம்போடு வந்துள்ளான்' என்றான். பாண்டியன் உடனே காவலாளிகளை அழைத்து, "என் மனைவியின் சிலம்பு இவன் கூறிய கள்வன் கையில் உள்ளதாயின், அவனைக் கொல்ல அச் சிலம்போடு கொண்டு வருக” என்று சொல்ல. வாயெடுத்தவன் வினை பலிக்குங் காலமாதலால் மயங்கி "அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க" என்றான். - - உடனே காவலாளிகள் பொற் கொல்லனோடு சென்று கோவலனைக் கண்டார்கள். மாசற்ற முகத்தேர்டிருந்த அவ்வணிகர் பெருமானைக் குற்றமற்றவனெனக் காவலாளிகள் எண்ணினர். அதனால், ஒருவரும் அவனைக் கொல்ல விரும்ப வில்லை. அது கண்ட பொற்கொல்லன் காவலர்