18 நாற்பெரும் புலவர்கள் முத்துப்பரல் இருந்தது. அக்கணமே பாண்டியன் உண்மையை உணர்ந்தான்! தான் பொற் கொல்ல. னால் ஏமாற்றப்பட்டதை எண்ணி மயங்கிக் கீழே விழுந்தான்; உயிர் துறந்தான். அவன் மனைவி கோப்பெருந்தேவியும் ஆவி நீத்தாள். சுண்ணகி, வீராவேசம் கொண்டவளாய் அரண்மனையை விட்டு நீங்கி, "நான் பத்தினி யாயின் இவ்வூரை அழித்து விடுகிறேன். பார்” என்று சபதம் செய்து, தனது இடக் கொங்கையை வலக்கையால் திருகி எடுத்து நகரத்தின் மீது எறிந் தாள். உடனே அக்கினி தேவன் அவள் முன் தோன்றி, "அம்மே! யான் என்ன செய்ய வேண் டும்?” என்றான். கண்ணகி, "பார்ப்பார், அற வோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி என்னுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்றாள். அப்பொழுதே அந்நகரில் தீப் பற்றிக் கொண்டது. நகரைக் காக்கும் தெய் வங்கள் ஓடி விட்டன. மதுரையின் அதிதேவதை கண்ணகியை நோக்கி ஓடி வந்தது. - வெள்ளி அம்பலம் மதுரை மாநகரில் வெள்ளியம்பலம் என்றோர். அம்பலம் உண்டு. அதனில், துறவிகள் முதலாயி னோர் தங்கி இருப்பர். அவ்வம்பலத்தில் நமது சீத்தலைச் சாத்தனார், கண்ணகி மதுரையைத் தீக்கொளுத்திய சமயத்தில் தங்கியிருந்தார். மதுரைமா தெய்வம் கண்ணகியை நோக்கி வந்த
பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/20
Appearance