உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2罗 நாற்பெரும் புலவர்கள் வீர பத்தினியின் வரலாற்றையும் பாண்டிய னுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களையுங் கேட்ட சேரர் பெருமான் வருத்தங்கொண்டவனாய்ச் சாத்த்னாரை நோக்கி "புலiர், பாண்டிய மன்னன் செங்கோலினின்றும் வழுவினான். அதனால், அவன் கோல் வளைந்தது. ஆயின் தான். செய்தது பிழை என்பதை உணர்ந்த அக்கணமே. அவன் உயிர் நீத்தான். அதனால், அவனது வளைத்த கோல் நிமிர்ந்தது. அரசர்களாயிருப் பார்க்கு நாட்டில் மழை பெய்ய, வேண்டும் காலத். திற் பெய்யாது பொய்த்துப் போயின் துன்பமுண் டாகும். உயிர்கள் பிழை செய்யுமாயின் துன்ப முண்டாகும. கொடுங்கோலுக்கு அஞ்சி அரசரா யிருந்தற்குரிய உயர் குலத்திற் பிறத்தலில் துன்பமே அன்றி இன்பம் ஒன்றுமில்லை" என்று கூறினன். பின்னர்ச் சேரன், தன் மனைவியோடு கூடி ஆலோ சித்து, தன்னாடு நோக்கி வந்த பத்தினிக்கு ஆலயம் எடுத்து விழா இயற்றல் வேண்டும் என்று நிச்சயித், தான்; தான் நிச்சயித்தபடியே இமயமலை, o யினின்றும் சிலையைக் கொணர்ந்து அதில் பத்தினி' யின் உருவத்தைப் பொறித்து, அதனை ஒர் ஆலயத். தில் வைத்து விழா இயற்றினன். பத்தினிக் கட. வுளும் சேரனுக்குக் காட்சி தந்து மறைந்தது. சாத்தனார் கூறிய பத்தினியின் வரலாற். றையும், அவளுக்குச் சேரன் செய்த சிறப்பையும் சேர்த்து ஒரு நூலாக்க வேண்டும் என்று சாத்த னார் செங்குட்டுவனின் இளவலான இளங்கோ