6 நாற்பெரும் புலவர்கள் அப்பதியின் அகத்தும் புறத்தும் அமைந்துள்ள இயற்கைத் தோற்றங்கள் பாவலர்களின் உள்ளத்திற்கு நல்விருந்தாக இன்பத்தைப் பெருக்குவன. ஆன்றமைந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் அவ்வூரில் வாழ்ந்து வந்தாராவர். அப்பதியில் தாளாண்மையிற் சிறந்த வேளாண் மரபினரும், வணிக மரபினரும், பிற மரபினரும் பெருகி இருந்தனர். அவர்கள் யாவரும் வேறுபாடென்பதின்றி, ஒருகுல மக்களே போல் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். அப்பதியிலே இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர் வணிகர் குலத்திலே தமிழ்த் தாய் மகிழவும் புலவர் குழாம் புகழவும் ஒருவர் தோன்றினார். அவர் பெற்றோர்கள் அவருக்குச் சாத்தன் என்னும் தெய்வத்தின் பெயரை இட்டார்கள். ஆகவே, சாத்தன் என்பது அக்குமாரரின் இயற்பெயராகும். அவர், இளமையில் பைந்தமிழைப் பாங்குறக் கற்ற பாவலரிடம் தமிழ் மொழியை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்தார். அவர் பெரும்புலவராய்த் திகழ்ந்தமையின், 'ஆர்' விகுதியைத் தந்து சாத்தனார் என அறிஞர் அவரை அழைப்பாராயினர். - அக்காலத்தில் பீடுமிக்க மாட மதுரையில் சங்கத்தில் அமர்ந்து புலவர் பெருமக்கள் பலர் அருந்தமிழை ஆராய்வாராயினர். சாத்தனார் அச்சங்கத்தில் தாமும் ஒரு புலவராக இருக்க வேண்டுமென்று விருப்பங் கொண்டவராய்,
பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/8
Appearance