வருணனை என்பது நேரில் கண்டு வியந்த ஒன் அறினைக் குறித்து ஒருவன் பிறைெருவனிடம் அழகுபெற விளக்கிக் கூறுதல் ஆகும். அதனைத் தமிழர் அணி எனவும், வட மொழியாளர் அலங்காரம் எனவும் உரைப்பர். புலமை மிகுந்த பெரியோர், தம் கற்பனைத் திறனுல், தாம் கனவிலும் கண்டறியாத ஒன்றினைக் குறித்துச் சொல்லழகு, பொருளழகு ததும்பப் புனைந்து கூறுவர். அவ் வருணனைகள் பல்வகைப் பட்டிருப் பினும், பொதுவாக உயர்வு நவிற்சி, இயல்பு (தன்மை) நவிற்சி என்னும் இருவகையுள் அடங்கிவிடும். மலை போன்று உயர்ந்த தோள்கள் எனவும், 'கடல் போன்று அகன்ற கண்கள்,' எனவும் கூறப் படுவன உபசார உரைகள் அன்றி உண்மையுரை கள் அல்ல வாகலின், உயர்வு நவிற்சியே யாகும். * மாந்தளிர் போன்ற மேனி எனவும், மாவடு வகிர்ந்தா லொத்த கண்கள் எனவும் வருவன பெரிதும் பொருத்த முடைமையின், இயல்பு நவிற்சி (தன்மை)யுள் அடங் கும். அன்றியும், உவமை சிறிதும் இன்றி, உள்ளன
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/15
Appearance