மாணவர் கெறி 17 அடுத்தபடியாக அவன் தன் குடும்பநிலை, தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர் முதலியவர்கள் நில்ை ஆகிய இவைகளை நன்கு சிந்தித்துடஆவன புரிய முயலுதல் வேண்டும். முடிவில் நாட்டு நிலை, உலக நில முதலியவைகளைக் குறித்து நினைந்தும் பாடு பட உன்னுதல் வேண்டும். இத்தகைய உயர்ந்த குறிக் கோளினைத் தன் உள்ளத்திலே கொண்டு மாணவன் தன் மாணவப் பருவத்தினைப் பயன்படுத்திக் கொள்ள முயன்ருல் அந்தப் பருவம் அவனுக்கு மிகச் சிறந்த பருவமாகவே இருக்கும். அந்த மாணவன் பிறகு அடைய வேண்டிய எல்லா நலன்களையும் பெற்று இன் புற்று வாழ்தல் கூடும். இதற்கு எடுத்துக் காட்டாக எத்துணையோ புலவர் களையும், செல்வர்களையும், பேரறிஞர்களையும், வள்ளல் களையும் நம் நாட்டு வரலாறுகளிலிருந்தும், பிறநாட்டுச் சரிதைகளிலிருந்தும் என்னுல் விரிவாகக் கூற முடி யும். எனினும் நம் நாட்டுப் பேரறிஞர்களாகிய இரண் டொரு பெரியோர்களின் குறிக்கோள்களை மட்டிலும் நான் அவர்களிடம் நேரில் கேட்டறிந்த செய்திகளைக் கொண்டு சுருக்கிக் கூறுகின்றேன். பேராசியர் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார் பலவகைச் செல்வங்களோடும் பெரு வாழ்வு வாழ்ந்த வர். ஆல்ை அவர் இளமையில் அத்தகைய பெருஞ் செல்வத்துள் திளைத்த குடும்பத்திலே தோன்றிய வ ரல்லர். அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வருதற்கே மிகவும் முயன்றதாக என்னிடம் தெரிவித்திருக்கின்ருர். ஆல்ை அவர் தம் இளம்பருவத்திலிருந்தே உயர்ந்த குறிக்கோள் உடையவராக இருந்தார். அவர் தம் குறிக் கி.-2
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/23
Appearance