முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 85 பெற்றுத் துன்பம் இன்றி நீண்ட காலம் இன்பமாக வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். அவ் விதம் வாழ்வதற்குத் திருவள்ளுவர் தெளிவான ஒரு வழி வகுத்துரைத்துள்ளார். பழியஞ்சிப் பாத்துண் உை த்தாயின் வாழ்க்கை வழி எஞ்சல் வான் மும் இல் ' என்பதே அவர் கூறும் வழி. பிறர் நம்மைப் பழிக்காத வகையில் வாழ்தல் நம்மிடம் இருப்பதைப் பலருக் கும் உதவி வா முதல் ஆகிய இந்த இரண்டையும் நம் கடமையாகக் கொண்டால் நம் வாழ்க்கை நெறி ஒழுங் காகச் செல்லும் நாமும் நிலமிசை நீடு வாழலாம் என் பதே அவர் கருத்து. இவ்விதம் வாழ்வதற்கு முற்கால வாழ்க்கை நெறியே உதவுகிறது என்பது என் எண்ணம். சங்க கால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த அவர்கள் ஆங்காங்கு இயற்கையாய்க் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஆடம்பரம் இன்றி எளிய வாழ்வு வாழ்ந்தனர். அவர்கள் உணவும், உடையும் இயற்கையோடு பொருந்தியனவாய் இருந்தன. பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு ஏற்றனவாகவே அமைந்தன. அதனுல் அவர்கள் வாழ்வில் அமைதி நிலவியது ; இன்பம் பொங்கியது. செயற்கையான ஆடம்பர வாழ்வு வாழும் இக்காலத்தில் அத்தகைய அமைதிக்கும் இன் பத்திற்கும் இடம் இருக்கின்றதா ? இரண்டாவதாக இயற்கையோடு பொருந்திய வாழ்வு வாழ்ந்ததால் முற்கால மக்கள் பாடுபட்டு
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/41
Appearance