உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுச்சரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龜翻 நினைவுச்

எவ்வளவு காலமர் வளர்ந்து நின்னுதோ? அதுகளே அடி போடு அழிச்சுப்போட்டானுகளே ஐயா !

- இந்தக் காலமே அழிக்கிற காலமாத்தானிருக்கு. பெரிய டவுண்களிலே, விட்டிகளிலே, விட்டி இம்ப்ரூவ்மென்ட் யின் னும், டவுண் பிளானிங்னும் சொல்லி பெரிசு பெரிசா வளர்ந்து திற்கிற மரங்களே ஒவ்வொரு வருசமும் வெட்டிச் சாய்ச்சுக் கிட்டே இருக்காங்க. அந்தக் காலத்திலே ஒரு மரத்தை வெட் டினு, ரெண்டு மூணு மரம் வளர்ந்து வரும்படியா நட்டுவச்சுப் பாதுகாப்பு பண்ணுவாங்க. இப்போ மரம் நடு விழா”யின்னு பேரு பண்ணுறதுதான் மிச்சம். பணம் செலவாகிறதுதான் கண்ட பலன். பச்சையா நிக்கிற மரங்கள் மொட்டையாக்கப் படுது. அடிமரத்தை கரம்பிக்கரம்பி, தோலுரிக்கிற வேலே வேறே நடக்குது. அப்புறம் அது பட்டுப்போகும். பட்டுப் போச்சுன்னு சொல்லி, வெட்டி, ஏலத்துக்குக் கொண்டுவர வேண்டியது. விறகு ஆக்கவேண்டியது. எங்கும் இதுதான் நடக்கு. இந்த ஊரிலும் அதுதான் நடந்திருக்கும். இப்ப ரோடே மூளியாப்போயி, கண்ருவியா இருக்கே. தார்ரோடு ஆயிட்டுது, அதுமேலே பஸ்கள் அடிக்கடி ஓடுது. இது வளர்ச்சி இல்லேயா என்பாங்க. என்ன வளர்ச்சி போ ! நாற்பது வருஷங்களுக்கு முன்னலே, ரோடு எவ்வளவு அழகாக் கலகலப்பா இருக்கும் ! அதுலே நடந்துபோவதே ஒரு இதமான அனுபவமா இருக்குமே. ஒவ்வொரு சேன்லே ஒவ்வொரு அழகுத் தோற்றம்...

இலே உதிர் காலத்தில் மரங்களில் இலே பழுத்து, மஞ்ச ளாகி, உதிர்ந்து, ரோடு நெடுகிலும் பள்ளங்களிலும் இலைகள் மெத்தையாய் படிந்து, அப்புறம் அவை சருகாகி, காற்றிலே சுழன்று கலகலத்து, நடப்பவர் காலடியில் சரசரத்து-அது ஒரு தனி இனிமை. -

மொட்டையானவை போல் தோன்றும் மரங்களின் கிளே களில், குச்சிகளில், இலே மொட்டுகள் துளிர்த்து, பெரிதாகி, தாமிரத்தகடுகள் போலவும் கண்ணுடிகள் போலவும் விரிந்து, பெருசாகி, இளம் பச்சைக்குளு குளுப்பாய் மலர்ச்சி பெற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/46&oldid=589290" இலிருந்து மீள்விக்கப்பட்டது