உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடங்கும் குறைந்து அருகி விட்டது. அநேக குடும்பங்களில் இவ் வழக்கம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. ஆயினும், ஆசாரப்படி விசேஷம் நடத்தி நவதாலி கட்டுகிறவர்கள் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் கூட பலர் எப்போதும் நவனாலியை கழுத்தில் அணிந்து கொள்வதில்லை, கழற்றி வீட்டில் பத்திரமாக வைத்துவிடுகிறார்கள். முக்கியமான விசேஷ நாள்களில் அதை எடுத்துக் கட்டிக் கொள் கிறார்கள். உறவுமுறைகளைக் குறிப்பிடுவதிலும் கார்காத்தாரிடையே சில மாறுபாடுகள் காணப்படும். வேளாளர்களும் பிறரும் சிறியதாயாரை 'சித்தி என்று அழைப்பர். பெரியதாயார் பெரிய அம்மா ஆவார். கார்காத்தார் சமூகத்தில் சிறிய தாயாரை சின்னம்மை என்றும், பெரிய தாயாரை பெரியம்மை என்றும் குறிப்பிடுவர். பொதுவாக பிற சமூகங்களில் மதனி (மதினி) என்றும், அண்ணி எனவும் அழைக்கப்படுகிற அண்ணன் மனைவி வரிசையார் என்று குறிக்கப்படுவார். காலப்போக்கில், வரிசையார் என்பது அருகிவிட்டது. அண்ணி என்பது சகஜ வார்த்தையாக வழக்கில் வந்துள்ளது. வரிசையார், கணவனின் தம்பியை (கொழுந்தன் என்ற உறவை) சின்னப்பிள்ளை என்று கூப்பிடும் வழக்கம் இருந்தது. இதுவும் மறைந்து போயிற்று. கணவனின் தங்கையை (சின்ன நாத்தனார்) மூத்த வரிசையார் தோழியாரே என்று இயல்பாக அழைக்கும் பழக்கம் 1930கள் 40களில் கூட நடைமுறையில் இருந்தது. இதுவும் மங்கிமறைந்தது. இப்படியாகக் காலங்கள் தோறும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கார்காத்த வேளாளர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே தான் 'கொள்வினை கொடுப்பினை செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். இதர சைவ வேளாளர்கள், சைவச் செட்டியார்கள், ஒதுவார்கள் குடும்பங்களிடையே சகஜமாக சம்பந்தம் செய்து கொள்கிற வழக்கம் இருக்கிறது. பொதுவாக வேளாளர் எனப்படுவோர் (கார்காத்தார்களும் பிறரும்) வேளாண்மையில் ஈடுபட்டு, பயிர்த்தொழில் புரிவோர் என்று சொல்லப் படுகிறது. நடைமுறையில் அவர்கள் வயில்களில் இறங்கி உழைத்துப் நிலைபெற்ற நினைவுகள் : 27