உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 & நிலைபெற்ற நினைவுகள் எனவே, செட்டியார் சினிமா உலகம்’ பத்திரிகையைத் தொடங்கி நடத்தலானார். சினிமா வட்டாரத்திலும் செல்வாக்கு பெறலானார். சினிமாத் துறையில் முன்னேற விரும்பிய அநேகர் அவர் துனையை நாடலானார்கள். அவர்களில் சிலரது திறமையையும் உழைப்பையும் செட்டியார் தனது பத்திரிகைக்குப் பயன்படுத்திக் கொண்டார். தமிழ்த் திரைப்படத்துக்கு வசனம் எழுதுவதில் தனிச்சிறப்பு பெற்றிருந்தவர் இளங்கோவன். ம.க. தணிகாசலம் என்பது அவரது இயற்பெயர். அவர் 'தினமணி நாளிதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதை விட்டுவிட்டு சினிமாத் துறையில் பிரவேசித்தார். ஆரம்ப காலத்தில் அவர் பி.எஸ். செட்டியாரின் உதவியை நாடினார். சிறிது காலம் இளங்கோவன் "சினிமா உலகம்’ பத்திரிகைப் பணிகளைக் கவனித்து அதற்கு உயிருட்டிக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறந்த தமிழ்க் கவிஞர்களில் பாலபாரதி சது. சுப்ரமணிய யோகியார் முக்கியமானவர். சது.க. யோகி என அழைக்கப்பட்டு வந்தார். சினிமாத் துறையில் இறங்கிய அவரும் சிறிது காலம் "சினிமா உலகம் இதழுக்குப் புத்துயிர் அளித்தார். சினிமாத் துறையில் அடிபதித்த கவிஞர் பாரதிதாசனும் கொஞ்ச காலம் சினிமா உலகம் இதழைக் கவனித்துக் கொண்டார். இதனால் எல்லாம் பி.எஸ். செட்டியாரின் இலக்கிய உணர்வும் வளர்ச்சி பெற்றிருந்தது. அவர் வெளியிட முன்வந்த மலர்கள், இலக்கிய நயத்துடனும் அமைய வேண்டும் என்று விரும்பி ஆவண செய்து வந்தார். அவருடைய இந்த ஆசை நிறைவேற 'கலாமோகினி’ ஆசிரியர் விரா. ராஜகோபாலன் (சாலிவாகனன் என்ற புனைபெயர் அவருக்கு உண்டு) வேண்டிய உதவி புரிந்தார். நல்ல எழுத்தாளர்களின் விலாசம் கொடுத்து, அவர்களைத் தொடர்பு கொள்ளத் துாண்டினார். அவர் மூலம் தான் செட்டியார் என்னிடம் மலருக்குக் கதை கேட்கலானார். மலர்தோறும் எனது கதை வெளிவரலாயிற்று. 'கலைமகள் இதழிலும் என் கதை பிரசுரம் பெற்றது. 1940களில் 'கலைமகள் இலக்கியத் தரம்மிக்க பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 'மணிக்கொடி நின்றுவிட்ட