உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலகத்தாருக்கு எழுதி அவர்கள் விரும்பினால் அதனை அனுப்பலாம். நூலின் தலைப்பிலாவது, நூலாசிரியர் பெயரிலாவது மாற்றம் இருந்தால் இதுபற்றி நூலகத்தாருக்கு உடனே அறிவித்தல் வேண்டும். இது போன்றே அன்னிய வெளியீடு பற்றியும் நூலகத்தாரிடம் கலந்து, பின்னர் இது குறித்து ஆணை வருமாயின் நூலினை அனுப்புதல் வேண்டும். ஏதாவதொரு நூலின் பெயர் ஒரு தடவைக்கு மேற் காணப்படுமானால் முதலில் ஒரு படியினை அனுப்பிவிட்டு அதன் பின்னர் இச்செய்தியினை நூலகத்தாருக்கு அறிவித்தல் பொருத்தமுடைத்தாம். அவர்கள் ஒப்பினால் உடன் மற்றப் படிகளையும் அனுப்பலாம்.

சில நூல்கள் மேலும் பதிப்பிக்கப்படாமையினால் கிடைப்பதற்கு அரிதாக இருக்கலாம். எனினும் இத்தகைய நூல்களைப் பழைய நூல் விற்பனையாளரிடமிருந்து பெறலாம். அவ்வாறு ஏற்படுமாயின் முதலில் பழைய நூல் விற்பனையாளர் பலரிடமிருந்து விலைப்பட்டியல் பெற்றுப் பின்னர் நல்லநிலையிலுள்ள நூல்களைப் பெறுதல் வேண்டும்.

பருவ வெளியீடுகள், தொடர்கள் :-

பருவ வெளியீடுகள் என்றால் என்ன? தொடர்கள் (Serials) என்றால் என்ன? இரண்டும் ஒன்றே. குறிப்பிட்ட சிலகாலங் கழித்துக் கழித்து வரும் பகுதிகளும், தொகுதிகளும் பருவ வெளியீடுகள் (Periodicals), தொடர்கள் எனப்படும். இவைகள், தற்காலம் சற்று முந்திய காலம் என்பவை பற்றிய கருத்துக்களை அறிய மிகவும் உதவியாக இருக்கும். அறிவுலகத்திலுள்ள எந்தத் துறையிலும் இம்மாதிரியான வெளியீடுகள் இல்லாமல்

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/33&oldid=1111766" இலிருந்து மீள்விக்கப்பட்டது