32
நெருப்புத் தடயங்கள்
நேர்த்தி. ஐந்து தலை நாகம், மரகத மணியை சுமந்து நிற்பது போன்ற தோற்றம்.
தாமோதரன், தன் கையை அகற்றவில்லை. அவள், அதில் படர்ந்த முகத்தை எடுக்கவில்லை. கண்களைத் திறக்கவும் முடியவில்லை. தாமோதரன் குரல், அவள் காதில் உஷ்ணக்காற்றின் உராய்வோடு விழுகிறது.
"தமிழு, நான் ஒரு முட்டாள். நீ அஸிஸ்டெண்ட் புரபஸராகி இலக்கியக் கூட்டத்துல பேசி, பிரபலமாயிட்டே. ஒன்னோட கூட்டத்துக்குக்கூட நான் 'டூட்டில’ வரவேண்டியதிருக்கும். ஒன்னோட வாழ்க்கை வட்டம் அகலமாயிட்டது. இந்த சாதாரண சப்-இன்ஸ்பெக்டரை மறந்திருப்பேன்னு நினெச்சன். ஆனால், நீ பேசு தமிழு . பேசு.”
'தமிழு’ இன்னும் தன் முகத்தை மீட்டுக் கொள்ளாமலே பேசியது.
"வாழ்க்கை வட்டம் என்னதான் அகலமாய் போனலும், அதுக்கு ஒரே ஒரு மையம்தானே உண்டு! நான்தான் முட்டாள். தாமு சப்-இன்ஸ்பெக்டராயிட்டான்... தப்பு, டார். எவனாவது பெரிய பணக்காரன் என்னோட தாமுவையும் அவன் வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்து, மருமகளாக்கி, தன்னோட சொத்துக்களை காவல் காக்க வைப்பான்னு நினைச்சேன்.”
- இப்போ?”
"இப்போவா? நீங்க என்னை விடுறிங்களாம்."
இருவரும் சிறிது விலகிக் கொண்டார்கள். பிறகு, ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டார்கள். முதன் முதலாக தனிமையில் சந்திக்கும் கூச்சம் இருந்தாலும், பயமற்றுப்போனார்கள். காதல் மின்சாரம் மாதிரி. ஒயரிங் முடிந்துதான் கனெக்க்ஷன் கொடுக்க வேண்டும். இவர்களைப் பொருத்த அளவில் இந்த ஒயரிங் எப்போதோ