உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18லா. ச. ராமாமிர்தம்


"அரே தம்பி-இவ்வளவு பெரிய பிளாட்பாரம் கட்டி விட்டிருக்காங்களே-அது போதல்லையா உனக்கு? ஏன்? மோட்டாரில் விழுந்து சாவணும்னு இஷ்டமா? :ாட்டிக் கொண்டால், ஆள் அட்ரெஸ் இல்லாமல் போயிடுவையே! பொறுக்கறத்துக்கு எலும்புகூட அகப்பாடதே-ரண்டா தம்பி, உன் உடம்பிலே எலும்பு இருக்குதா? பம்பிளீஸ் நார்த்தம் பழம் மாதிரியிருக்கையே!-’’ இவ்வாறு, கோபிப்பதுபோல் அபிநயித்துக் கோண்டு, இவனை ஒரு போலீஸ்காரன் அலக்காய்த் துக்கி, பிளாட் பாரத்தில் ஏற்றிவிட்டு, கன்னத்தைச் சலுகையாய் திமிண்டி அனுப்பினான். ஆமாம், இனிமேல் 'அட்ரெஸ் ஒன்றை ஒரு சீட்டில் எழுதி ஜேபிக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். அது துண்டுக் காகிதமாயிருந்தால், கீழே விழுந்தாலும் விழுந்து விடும். ஒரு குண்டுசியைக் கொண்டு மெடல் மாதிரி அதைச் சொருகிக்கொள்ள வேண்டும். வாத்தியாரைக் கேட்டால், கொடுப்பார். கொடுப்பாரா? ஏன்? என்னத்துக்கு?’ என்று தான் கேட்டார். "நான் செத்துப் போனால், என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா? அதற்குத்தான் என்று சோல்ல வேண்டும். சாவைப் பற்றிய எண்ணம் அவனது சிந்தனைத் தேடாரில் புகுந்ததும், யோசனைகள் இன்னமும் ரோம்பர் சுவாரஸ்யமாகி விட்டன. சாவதானமாய்ச் சிந்தனையில் மூழ்கிய வண்ணம், குனிந்த தலையும் தளர்ந்த நடையுமாய் நடக்கலானான். நடையின் தழதழப்பில், கொழு கொழுப் பான அவனுடைய கன்னத்துச் சதை அதிர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/24&oldid=1403464" இலிருந்து மீள்விக்கப்பட்டது