உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22லா. ச. ராமாமிர்தம்


"' என்ன டா?..." அவன் கண்களிலிருந்து சிந்தும் அலட்சியம் வெறுப்பு இந்த இரண்டும் சேர்ந்த தீயிலே, அப்பா ஏன் இன்னமும் எரிந்து போகவில்லை? இனிமேல் இவனுக்கு அம்மா இல்லை; அம்மாவைக் கொன்றதால், அப்பாவும் இல்லை. இவன் நிர்க்க தியான குழந்தையாகிவிடுவான். அப்படிகே எழுத்து முகத்தைத் திருப்பிக்கொண்டு , வீட்டுக்கு வெளியே போய்விடுவான். எங்கே? அதுதான் தெரியவில்லை. எங்கே? எங்கேயாவது போகிறது. தாயும் தகப்பனுமில்லாத குழந்தைக்குச் சாதம் போட, எத்தனைபேர் காத்திருக்கமாட்டார்கள்? ஆனால், அவன் உலகத்தை வெறுத்துவிடுவான். அப்படியென்றால் என்ன?’ என்று மனதுக்குள்ளே ஒரு குட்டிக் குரங்கு கேட்டது. அது என்னவோ! ஆனால், அவன் உலகத்தை வெறுத்துவிடுவான். அம்மா சொன்னாளே துருவன் கதை, அதுமாதிரி-பிரகலாதன் கதைகூட , அம்மா சொல்லியிருக்கிறாள்: இரணியாய நமஹ.. துருவனாகி விடலாமா? பிரகலாதனாகலாமா? துருவனாவதுதான் மேல், துருவனானால் நட்சத்திரமாகிவிடலாம்; மேலே போம் "மினுக்கு மினுக்கென்று மினுக்கலாம்.

ஆனால், அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், எல்லாம் பெரிய ஏமாற்றமாயிருந்தது. அம்மா சமையலறையில் செத்துக்கிடக்கவில்லை; கூடத்தில் பீரோக் கண்ணாடி யெதிரில் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு தலை வாரிக் கொண்டிருந்தாள். அம்மாதான் ஏகமாய் மினுக் கிக் கொண்டிருந்தாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/28&oldid=1403466" இலிருந்து மீள்விக்கப்பட்டது