உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புலவர் கா. கோவிந்தன் மேற்கொண்ட போர் என அரண் காரணமாக நிகழ்ந்த போர்கள் இரண்டு; ஆற்றல் செருக்கால் அஃதுடையான் மேற்கொண்ட போர், அச்செருக்கடக்க முனைந்தான் மேற்கொண்ட போர் என ஆற்றல் காரணமாக நிகழ்ந்த போர்கள் இரண்டு; ஆகப் போர்கள் எண் வகைப்படும்; ஆனால், இவற்றுள் நிரை கவரவும், நாடு கைப்பற்றவும், அரண் அழிக்கவும், ஆற்றல் நிலை நாட்டவும் மேற்கொண்ட போர்கள் அழிவுப் போர்களாம். அறமல்லாப் போர்களாம். ஆகவே, ஆசிரியர் அவற்றைப் பாராட்டினாரல்லர்; நிரை மீட்கவும், நாடு காக்கவும், அரண் காக்கவும், ஆற்றல் செருக்கு அழிக்கவும் மேற்கொண்ட போர்கள் நான்கும், ஆக்கப் போர்களாம்; அறநெறிப் போர்களாம்; ஆகவே, ஆசிரியர் தொல்காப்பியனார் அப்போர்களுக்கே, முறையே, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை எனும் பெயர்கள் சூட்டிப் பாராட்டியுள்ளார்; அப் போர் நிகழ்ச்சிகளைக் கூறுவார், அப்போர்கள் நிகழ்தற்கு வழி வகுத்த அவ்வழிவுப் போர்கள் இல்லையேல், அவ்வாக்கப் போர்கள் இல்லையாகவே, அவ்வாக்கப் போர் நிகழ்ச்சிகளைக் கூறுவதன் முன்னர், அவ்வழிவுப் போர் நிகழ்ச்சிகளையும் விளக்கியுள்ளார். தொல்காப்பியர் பாராட்டும் பழந்தமிழ்ப் போர்கள் இந்நான்கேயாவும், அறவழி ஆட்சி நடாத்திய பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமையினை உணராத பிற்கால இலக்கண ஆசிரியர்கள், அவ்வெட்டுப் போர் களுமே பாராட்டற்குரியன என்றும், ஆசிரியர் தொல் காப்பியனாரும் அவ்வெட்டுப் போர்களையும் எடுத்துக் கூறி விளக்கிப் பாராட்டியுள்ளார் என்றும் கூறுவாரா யினர்; தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை