உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புலவர் கா. கோவிந்தனார்

செவியுள் வந்து புகவே அம்முழக்கம் வந்த இடம் நோக்கி விரைந்தார். ஆங்கு, வெற்றிக்குத் துணை நின்ற வேற்படை முழுநிலவின் பேரொளி போல் ஒளி வீசுவதையும், பாடினி ஒருத்தி, அவ்வேலின் கொற்றம் குறித்துப் பாடப் பெற்ற பாடல் ஒன்றைப். போர் முரசின் முழக்கிற்கேற்ப, தாளம் ஒத்துப் பாடுவதையும், பாடுவது மட்டுமல்லாமல், அப்பாடம் பொருளுக்கும் முரசின் முழக்கிற்கும் பொருந்த அவிநயம் காட்டி ஆடி கொண்டிருப்பதையும், அவ்வாடல் பாடல்களில் சென்ற உள்ளம் உடையவன்ாய்ச் செல்வக்கடுங்கோ, தன்னை மறந்து செம்மாந்து வீற்றிருக்கும் திருவோலக்கக் காட்சியையும் கண்ணுற்றார். :

செல்வக் கடுங்கோ, ஆடல் பாடல்களில் சென்ற உள்ளம் உடையவன்ாயிருக்கும் நிலையிலும் பாசறைக்குள் புதியோர் பார் புகிலும், அந்நிலையே அறிந்து கொள்ளும் விழிப் புடையவனுமாவான், அதனால், கபிலரின் வருகையைக் கண்டு கொண்டான். புலவரெல்லாம். போற்றும் பெரும்

புலவர் கபிலர்: மூவேந்த்ர்களாலும் வெற்றி கொள்ள மாட்டாப் பெருiரனும், வள்ளல்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாய் விளங்கவல்ல பெருங்கொடையாளனுமாகிய

பாரியின் ஆருயிர் நண்பர்; அவரா இங்கு வந்திருப்பார்: என்ற வியப்பில் ஆழ்ந்து போகவே அவரை வரவேற்கும் நினைவிழந்து சிறிதே மெய்ம்மறந்து போனான் கடுங்கோ.

கபிலர் உள்ளத்தில் கடுஞ்சினம் மூண்டுவிட்டது: உள்ளத்தில் எண்ண அலைகள் எழுந்து விட்டன், முற்றிக் கனிந்து, புதுப்புண்கள் போல் வெடித்துக் கிடக்கும் பலாக் கனிகளின் சாற்றினை. வாடைக்காற்று தொலை தூரத்துக்கும் கொண்டு சென்று துளவும் வளம் மிக்க நாடுடையவன்; அத்தகு நாடுடைமையால், மூவேந்தர்கள் எத்தன்ை நாட்கள் முற்றிக் கிடக்கினும் வெற்றி கொள்ள் மாட்டாப் பேராண்மையாளன்: ஒவியத்தில் தீட்டிக்