உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புலவ்ர் கா, கோவிந்தனார்

விடும். அவனைப் பணிய மறுத்து, அவ்வாறு பாழுற்ற நாடு அது. அவன் தலைமை ஏற்றுத் திரை தந்து, அவன் தோழமை கொண்டதால். தளரா வளம் பெற்றுத் தழைத் திருக்கும் நாடு இது. ஆகவே ஒரு நாட்டின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அந்நாட்டுக்குரியோனின் பணிவும், பணியாமை யுந்தான் காரணமே அல்லது, செல்வக் கடுங்கோ அல்லன்” எனக் கூறித் தெளிவித்தனர்.

தம்மூர்ச் சான்றோர் கூறியன கேட்டுச் செல்வக் கடுங்கோ பால் கொண்ட மதிப்பு, இவ்வூர்ச் சான்றோர் கூறியன கேட்டதால் பன்மடங்கு மேலும் சிறக்கவே அவன் புகழைப் பாவrrக்கி மகிழ்ந்தார் கபிலர்.

"இழை அணிந்து எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு

மழையென மருளும் மாயிரம் பல்தோல் எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு மைந்துடை ஆர்எயில் புடைபட வளைஇ வந்துபுறத் திறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு ஒல்லாமய லொடு பாடு இமிழ்பு இழி தரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுக்திறல் துப்புத்துறை போகிய கொற்ற வேங்தே! புனல்பொரு கிடங்கின், வரைபோல் இஞ்சி அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப் பணிந்து திறைதருப நின் பகைவராயின்

புல்லுடை வியன் புலம் பல்லர் பரப்பி, வளனுடைச் செறுவின் விளைந்தண்வ உதிர்ந்த களனறு குப்பை காஞ்சி சேர்த்தி - - அரியல் ஆர்கை வன்கை வினைஞர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் ஆடுசிறை வரி வண்டு ஒப்பும் பாடல் சான்ற அவர் அகன் தலை நாடிே:

(பதிற்று -62,