பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

21

களும், அறிஞர்களும் கூடும் இடமாகவுமிருந்து கூடல் என்ற புகழ்ப் பெயரைப் பெற்றிருந்த நகரம். கடைச் சங்கப் புலவர்கள் கூடியிருந்து தமிழ் ஆய்ந்த நகரம்.

ஆய்வுக்குரிய இரு பகுதிகளில் முன்பே கூறப்பட்டது போல் கட்டடக்கலை என்பது தனித்திறன். நகரமைப்பு என்பது கூட்டுத்திறன்.

வஞ்சியும் பூம்புகாரும் வாணிபச் செழிப்புள்ள நகரங்கள். மதுரை அவற்றோடு அறிவுச் செழிப்புமுள்ள நகரம். காஞ்சியும் கலைச் செழிப்பு வாய்ந்த நகராக இருந்துள்ளது. உறந்தை முந்திய சோழர் கோநகராயிருந்துள்ளது. இவ்வாய்வுக்கு,

1. சங்க நூல்கள், 2. காப்பியங்கள் 3. புராணங்கள், 4. பிற இலக்கியங்கள், 5. மனையடி சாத்திரம், 6. கட்ட டக் கலை நூல்கள்

ஆகிய பிரிவைச் சார்ந்தவற்றுள் கட்டடக் கலை, நகரமைப்பு பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ்க் காப்பியங்கள், புராணங்கள் முதலியவற்றில் நாட்டுப்படலாம், நகரப்படலம் என்பவை பொதுவாய்த் தொடக்கத்தில் அமைந்தவை. பெரும்பாலும் நகரமைப்புப் பற்றிய விளக்கங்களுக்கு இவை பெரிதும் உதவுபவை.

நகரமைப்புப் பற்றியும், அந்நகர் எந்த ஆற்றின் கரையில் அல்லது எந்த மலையருகே அமைந்துள்ளது என்பது பற்றியும் கூறித் தொடங்காத பழைய நூல்களே பெரும்பாலும் இல்லை எனலாம்.

இப்பகுதிகள் பெரும்பாலும் வருணனைகளாகவும், புகழ்ச்சியாகவும் கற்பனை நயந்தோன்றவும், பெருமையாகவும் கூறப்பட்டிருப்பினும் பெருநகரங்களை அறிமுகப்படுத்தவும் ஆராயவும் இவை பேரளவிற்கு உதவவே செய்கின்றன.

ப-2