பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

39


16. பானுமதம், 17. பெளதமாதம், 18. நாராயணியம், 19. கெளதமம், 20. காஸ்யபம், 21. மனுசாரம், 22. குலாலம், 23. சித்ரம், 24. சித்ரயாமளம், 25. வாசிஷ்டம், 26. சித்ரபாகுல்யம், 27. மனோகல்பம், 28. தேசிகம். . -

இந்த 32ம் 28ம் ஆன சிற்ப நூல்கள் 'முக்கியம்' என்று கூறப்பட்டன. (Principal Shastras).27 இவை போலன்றித் துணை நூல்கள் உபசில்ப சாஸ்திரம்28 எனப்பட்டன. (Subsidiary shastras). தென்னிந்தியப் பிரிவு (Southern school of Architecture) ஏறக்குறைய 52 சிற்ப நூல்களைக் கொண்டிருந்தது என்கிறார் கணபதி ஸ்தபதி.29 .

ஆனால் இன்று அவற்றுள் ஒன்பதே முழுமையாக உள்ளன என்றும்30 அவரே கூறுகிறார்.

1. மயமதம், 2. விசுவகன்மீயம், 3. மானசாரம்,4. மனுசாரம், 5. இந்திரமதம், 6. வாஸ்துவித்யா, 7. தாஸ்யபம் 8. சித்ர காஸ்யபம், 9. நாராயணீயம்

இந்த ஒன்பது நூல்களே இன்று தமிழகச் சிற்பிகளால் கற்கவும், நடைமுறையிற் கொள்ளவும் படுகின்றன.31

இவை தவிர சிற்ப உபநிஷதங்கள் என ஓர் ஆறும் நடைமுறையில் உள்ளன.32 அவையாவன :

1. ஶ்ரீகுமாரரின் சில்பரத்னம், 2. சில்பரத்னாகரம், 3. மனுஷ்யாலய சந்திரிகா, 4. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, 5. பிராமீயம், 6. சரஸ்வதியம் - பெருப்பாலும் இவை கோயில் ஆகமங்களோடு தொடர்புபடுத்திக் கற்கப்பட்டன. .

பொதுவில் கட்டடச் சிற்பக்கலையை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார் கணபதி ஸ்தபதி.33