இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதியார் இவர் பாரதியார்-தமிழ்ப்
பாட்டுப் பாடிடும் பாரதியார்
வீரராம் இவர் பாரதியார்-நாட்டு
விடுதலைக் கவி பாரதியார்!
இந்திய நாட்டு விடுதலைக்கே-இவர்
எழுதிய பாட்டுகள் ஆயிரமே
முந்திய மூடப் பழக்கங்களை-முட்டி
மோதி யொழித்தவர் பாரதியார்
பாரதியார் இவர் பாரதியார்-வீரப்
பாட்டுப் பாடிடும் பாரதியார்