இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கடவுள் சிலையைப் படைத்தான் சிற்பி
கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கடவுள் கோயில் படைத்தான் சிற்பி
கல்லைப் படைத்தார் கடவுள்-அதில்
கலையும் அழகும் படைத்தான் சிற்பி
கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கல்லில் கும்பம் படைத்தான் சிற்பி
கல்லைப் படைத்தார் கடவுள்-அந்தக்
கல்லுக்குப் பெருமை சேர்த்தான் சிற்பி!