இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உற்று உற்றுப் பார்க்கிறார்
உறுமி உறுமிப் போகிறார்
குற்றஞ் செய்யும் நோக்குடன்
குதிக்கி றாரே பூனையார்!
சந்து பொந்துப் பக்கத்தில்
சாயுங் கால நேரத்தில்
பந்தம் போன்ற கண்ணுடன்
பாய்கி றாரே பூனையார்!
இடுங்கி யுள்ள கண்களும்
எடுப்பா யுள்ள மீசையும்
நடுங்கச் செய்யும் முகத்துடன்
நடக்கி றாரே பூனையார்!