இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாளிதழ் வாங்கிப் படியுங்கள்
நாட்டு நடப்பை அறியுங்கள்
காலம் சுழலும் மாற்றத்தைக்
கணக்காய் அறிந்துவாழுங்கள்!
அரசியலுண்டு; விலை மாற்றம்
அறிய லாகும்; விளையாட்டும்
திருவிழாவும் ஆயிரமாம்
செய்திகள் அறிந்து மகிழ்ந்திடலாம்!
உலகம் காணும் முன்னேற்றம்
ஒவ்வோர் நொடியும் அறிந்திடவே
நாளிதழ் வாங்கிப் படியுங்கள்
நாட்டு நடப்பை அறியுங்கள்!