இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அப்பா அம்மா வணக்கம்
அண்ணா அண்ணி வணக்கம்
அன்புத் தாத்தா பாட்டி
அனைவருக்கும் வணக்கம்
அறிவு தரும் எங்கள்
ஆசிரியர்க்கும் வணக்கம்
அன்பு கொண்டு வாழ்த்தும்
அருளோர்க் கெல்லாம் வணக்கம்
வணக்கம் வணக்கம் அன்பு
வளர்ப்போர்க் கெல்லாம் வணக்கம்