இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வல்லிக்கண்ணன் ஆ 23
- கொல்லை தன்னில் பூம்பாகற் கொடி தனது சுருட்கையூன்றி உறை கூரை மேற்படர்ந்து சென்றிட்டாலும் ஒரு தொடர்பும் கூரையிடம் கொள்ளாமைபோல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன் பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்வாள்' அவள் தன் அத்தானுக்குக் கடிதம் எழுது கிறாள். குளிர் புனல் ஒடையே என்று அன்பாய் அழைக்கிறாள். காதலால் காயும் கன்னி, பழத் தோட்டம் அங்கே, பசிகாரி இவ்விடம் என்று பிரிவின் துயரை விளக்குகிறாள். அன்பன் காதலியின் கடிதத்தைக் கண்களால் வாசிக்கவில்லையாம். பின்? அவசரத்தையும் துடிப்பையும் விளக்கும் கவிதை சொல்வதைக் கவனியுங்கள். தணலிலே நின்றிருப்போர் தண்ணிரில் தாவுதல் போல் எழுத்தினை விழிகள் தாவ இதயத்தால் வாசிக்கின்றான்' காதலிக்கு வீட்டிலே கட்டுப்பாடு அதிகம். அவளை எல்லோரும் துன்புறுத்துகிறார்கள். அந் நிலையில் காதலால் ஏங்கும் மங்கை சொல்லும் உவமை இதயத்தைத் தொடுகிறது. "ஈ முடித்த தேன் கூட்டை வடித்தல் போலே எனை வருத்தாதீர்' "ஆலையிட்ட கரும்பாக்கி’