உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குயிற் பாட்டு

ஒன்றே யாதுவாய் உலகமெலாந் தோற்றமுறச்
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறுபடுமோ? யார்படுவார்?
நாளொன்று போயினது; நானும் எனதுயிரும் 10
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
வஞ்சனை நான் கூறவில்லை மன்மதனார் விந்தையால், 15
புத்திமனஞ் சித்தம் புலனொன்(று) அறியாமல்,
வித்தைசெயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையெனக்
காலிரண்டும் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் 20
சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறலெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25
காண நான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்.

5. குயிலும் குரங்கும்

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே,
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே