பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x{{ காந்தியடிகள் அடிக்கடி கூறுவதுண்டு: "ஐந்து மடங்கு கற்ற அறிவைக் காட்டிலும் ஐந்து தோலா அனுபவமே மேல்' என்று சொல்லுவார். ஆகையால் படிப்பறிவைக் கொண்டு, அதுவேதான் பாரதியாருக்குக் கிடைத்த அனுபவம் என்று முடிவு கட்டி விடக்கூடாது. எல்லா மதங்களும் ஒரே உண்மையைத் தான் தெரிவிக்கின்றன என்று சொல்லுவது எளிது. ஆனால், பூரீராம கிருஷ்ண பரமஹம்சரைப்போல எல்லா மதங்களையும் பின்பற்றி அவற்றில் உண்மை கண்டார் என்று அறுதியிட்டுக் கூறுவதுதான் அரிது. இவ்வாறு சொல்லும்போது எனக்கும் மிகுந்த துயரமாக இருக்கிறது. ஏனென்ருல், பாரதியாரை அந்த அளவிற்குப் போற்றுகிறேன். ஆனால், நான் எனது ஆராய்ச்சிக்கு எட்டியவரையில் உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். பாரதியார் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கும் போது, பாரதியார் ஆத்ம ஞானியல்ல, அவர் ஒப்பற்றகவி, தமிழ் நாட்டிற்கு வாராது போலவந்த மாமணி. தமிழகத்தின் தவப்பயன். ஒரு புதிய விழிப்பை உண்டாக்கியவர். ஆகையால், என்றும் அழியாதிருப்பார் என்று சொல்லவே தோன்றுகிறது. மேலும் ஒன்று. ஒரு ஞானிக்கு மரணபயம் இருக்கக் காரண மில்லை. பாரதியாருக்கோ மரணபயம் எப்போது பார்த் தாலும் பீடித்து வந்திருக்கிறது. மரணத்தை வெல்லும் உபாயத்தைப் பிற்காலத்தில் வெகுவாகக் கடைப்பிடித்து வந்திருக்கிரு.ர். அதற்காக அவர் மெளனவிரதம் இருந்தும், ஒருசில சாமியார்களின் வழிகளைப் பின்பற்றியும் வந்திருக்கிரு.ர். இந்த விபரீத போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திரு. வ. வே. சு. ஐயர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு, "ஓர் புது வழி என்று கண்டால் பாரதியார் உற்சாகமாகக் கடைப்பிடிப்பார் என்றும், அதனைத் தடுக்க இயலாது" என்றும் திரு வ. வே. சு. ஐயர் கூறுகின்ருர். மேலும் அவர் கூறுகின்ருர், மனத்தை ஆள்பவன்தான் திடமான மனிதன். சாமியார், பண்டாரம் முதலிய சிலரின் கூட்டுறவு அவரை வேறு வழியில் இழுத்துச் செல்கிறது" என்று கூறிவிட்டுக் கவலையோடு பெருமூச்செறிந்தாராம்.