பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே, தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய், மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா, தனைத் தானளுந் தன்மைநான் பெற்றிடின், எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்: அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி, நின்னிருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. 4. விநாயகர் நான்மணிமாலை அகவல் 16 நிழலினும் வெயிலினு நேர்ந்தநற் றுணையாய்த் தழலினும் புனலினு மபாயந் தவிர்த்து மண்ணினுங் காற்றினும் வானினு மெனக்குப் பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான் உள்ளத் தோங்க நோக்குறும் விழியும் மெளன வாயும் வரந்தரு கையும் உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான் ஒமெனு நிலையிலொளியாத் திகழ்வான் வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த பிருஹஸ் பதியும் பிரமனும் யாவுந் தானே யாகிய தனிமுதற் கடவுள் யானென தற்ருர் ஞானமே தாய்ை முக்தி நிலைக்கு மூலவித் தாவான் லத்தெனவ சத்தெனச் சதுர்மறை யாளர் நித்தமும் போற்ற நிர்மலக் கடவுள்