பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 கள், கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் பாடல்கள் முதலியவை மாறி மாறிப் பாடப்படும். மாணாக்கர் இரு வர் பாடுவர். முதல் நாள் மாலையே, மறுநாள் காலை பாடப் போகும் பாடல்களை என்னிடம் அறிவித்து ஒப்பு தல் பெறவேண்டும். அவ்வாறு தணிக்கை செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட் டிருந்தது. இந்த நிலையில், சில நாட்களில், பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு என்னிடம் ஒப்பு தல் கேட்பர். அவன் பாடலைப் பாடக் கூடாது - அவன் நாத்திகன் - அவன் பாடலைப் பாடவே கூடாது' என்று கண்டிப்பாக நான் மறுத்து விடுவது வழக்கம். ஒரு நாள் சொற்பொழிவிற்காக நான் வெளியூர் சென்றிருந்தேன்; மறுநாள் காலை வகுப்பு தொடங்கு வதற்கு முன் வந்து சேர வேண்டும் எனக் குறிவைத்து விரைவாகக் கல்லூரிக்கு வந்துவிட்டேன். நான் கல்லூரிக் குள் நுழையும் போது குழு வழிபாடு நடந்துகொண்டிருந் தது. பாடல்கள் என்னால் தணிக்கை செய்யப்படவில்லை. நான் வந்தபோது இறை வணக்கப்பாடல் பாடிக்கொண்டி ருந்தனர்; அடுத்துத் தமிழ் வாழ்த்துப் பாடல் பாடினர். அந்தத் தமிழ் வாழ்த்துப் பாடலைக் கேட்டதும் யான் மெய்ம் மறந்து போனேன்; மயிர்க்கூச்செறிந்து மகிழ்ச் சியில் திளைத்தேன் அந்தப் பாடல், பாவேந்தர் பாரதி தாசனார் இயற்றியதும், இப்போது புதுவை மாநில அர சால் இறைவணக்கப்பாடலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுக் கூட்டங்களில் பாடப்படுவது மாகிய வாழ்வினில் செம்மை யைச் செய்பவள் நீயே என்று தொடங்கும் பாடல்தான். அப்பாடல் முழுதும் வருமாறு: