பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 பிரம்மாவின் தொடையிலிருந்தும், சூத்திரர் பிரம்மாவின் காலடியிலிருந்தும், (பாதத்திலிருந்தும்) தொடக்கத்தில் தோன்றியதாக ஆரியம் கூறிவைத்திருக்கிறது. சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலத் தில் தாழ்த்தப்பட்ட இனத்தினர் சிலர் வந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் பாரதியாரை நோக்கிப் பின்வருமாறு கேட்டாராம்:- ஏன் ஐயா! சிலர் பிரம்மாவின் முகத்திலிருந்தும் சிலர் தோளிலிருந்தும் சிலர் தொடையிலிருந்தும் சிலர் காலடியிலிருந்தும் பிறந்ததாகச் சொல்கிறார்களே-சரி, பஞ்சமர் எனப்படும் தாழ்த்தப் பட்ட பிரிவினர் எவ்வாறு பிறந்தார்கள்- என்று கேட் டார். அதற்குப் பாரதியார் இறுத்த பதிலாவது: முதல் நான்கு பிரிவுகளையும் சேர்ந்த பயல்கள் எவனுக்கோ-எங்கெங்கோ இருந்து பிறந்தார்கள். ஆனால், பஞ்சமர் எனப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்தான், உண்மையில் அவர்களுடைய அப்பா அம்மாவுக்குப் பிறந்த வர்கள்-என்று பாரதியார் கூறினாராம். இந்தச் செய்தியைப் பாவேந்தர் தமது நன்றியுரைச் சொற்பொழிவினிடையே கூறியபோது பலரும் வியப் படைந்தனர்.