உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதீயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 9.

யாகவும், திருத்தொண்டர் புராணமாகவும் விரிந்தது. சுந்தரரின் சுவட்டைப் பின்பற்றிக் காந்தியடிகள், தாதாபாப் நவுரோஜி, திலகர், லாலா லஜபதிராய், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற விடுதலைத் தொண்டர்களைப் பாடிப் போற்றினார் நம் கவிஞர்.

வாழ்க நீ எம்மான், இந்த

வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி

விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு கின்ற தாமோர்

பாரத தேசங் தன்னை வாழ்விக்க வந்த காந்தி

மகாத்மா !ே வாழ்க! வாழ்க! : என்பது காந்தியடிகளைப் போற்றியுரைக்கும் பாடல்.

நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்

தே மேயோர் உருவெனத் தோன்றினோன் ; வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை

மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன் ; துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே

தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும் ஆஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல்போல்

அன்பொ டோதும் பெயருடை ஆரியன்.” என்பது திலகரைப் புகழ்ந்துரைக்கும் பாட்டு.

இனப்பற்றும் மொழிப்பற்றும் : பாரதியார் ஒரு பச்சைத் தமிழ் மகன் , தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மொழியையும், இனத்தையும், காட்டையும் இணைத்துப் பாடிய பாரதீயம் இவர்தம் இணையற்ற கொள்கை.

வாழிய செந்தமிழ் வாழ்ககற் றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு.”

என்ற கொள்கை நம்மையெல்லாம் ஈர்க்கின்றது. தம் இனமக்கட்கு விடுதலை வேட்கையையும் மொழிப்பற்றையும் குழைத்து ஊட்டிய கவிஞர் பெருமான் தமிழகத்தின் பண்டைய பெருமைகளையும்: தமிழர்களின் வெற்றிகளையும் கூறுகின்றார்.

25. தே.கீ. வாழ்க நீ எம்மான்-1 26. டிை திலக முனிவர் கோன்-2 27. டிை வாழிய செந்தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/25&oldid=681251" இலிருந்து மீள்விக்கப்பட்டது