உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதீயம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கொள்கைகள் 2?

கணக்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;

கணக்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்: கணந்தோறும் நவகவமாம் களிப்புத் தோன்றும்;

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே கணந்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்

காளிபரா சக்தி அவள் அளிக்கும் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்

கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். என்று காட்டுவார். இயற்கை எழில் கவிஞர் உள்ளத்தில் மெய்ப் பொருள் விளக்கத்தை எழுப்புவதைக் கண்டு மகிழ்கின்றோம். கண்ணன் பாட்டில் தாய் குழந்தைக்குக் கதை சொல்லுவது போல் ‘சந்திரன் என்றொரு பொம்மை” என்று தொடங்கி இந்த அகிலக் காட்சியை-ஒரு விசுவரூப தரிசனம்போல்-காட்டி நம்மை மகிழ்விப் பதைக் கண்டு களிக்கலாம். இன்னொரு கவிதையில் இந்த அகிலத்தின் அகண்ட காட்சி அருமையாகக் காட்டப்பெறுகின்றது. “பாரதமாதாவின் திருப்பள்ளி எழுச்சி’யில் வைகறைச் சூழ்நிலை அற்புதமாகக் காட்டப்பெறுகின்றது. இங்ஙனம் பல இடங்கள்.

கடவுட் கொள்கை : பாரதியாரின் கவிதைகளை மேலோட்ட மாகப் பயின்றாலும் அவர் சக்தி வழிபாட்டாளர் என்பது தெற் றெனப் புலனாகும். பண்டையோர் வழிபடும் எல்லாக் கடவுளர் களைப்பற்றிப் பாடல்கள் காணப்பெறினும், சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற பண்டைய மரபு இவரிடம் சர்வம் சக்திமயம் ஜகத்” என்ற புது மரபாகின்றது. சக்தியைப்பற்றி அதிகமான எண்ணிக் கையில் பாடல்கள் காணப்படுவதே இதனைத் தெளிவாக்குகின்றது: இதற்கு அரண்ாகவும் அமைகின்ற்து.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண். 9 என்ற பாடற்பகுதி இதனை நன்கு மெய்ப்பிக்கின்றது. சக்தி’ என்ற பாடலில் அனைத்தும் சக்தி வடிவாம் என்ற தத்துவத்தை அலசிக் காட்டுகின்றார். பிறிதோர் இடத்தில்,

கனியிலே சுவையும், காற்றிலே இயக்கமும் கலந்தாற் போல் அனைத்திலும், கலந்தாய். 8. கண்ணன் - என் தாப். 9. தோ. பா. - கோமதி மகிமை - 5, 6, 7. 10. தோ.பா. மகாசக்தி வெண்பா- 4.

.ை சக்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/37&oldid=681264" இலிருந்து மீள்விக்கப்பட்டது