உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உள்ளதுவாய் அமைக்கவில்லை உயிர் உள்ளதில்லை: ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை! ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்தது வாயில்லை! என்று கூறிவிட்டு "அத்தனையும் கழித்துப் பார்த்தால் அத்திம்பேர் அம்மாமி என்ற தமிழர்தான் மிச்சம்!” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நம்முடைய திரைப் படங்களைப் பற்றிப் பாடினர். அவருடைய வேதனையை நீக்குகின்ற வகையிலேதான் அண்ளு அவர்களின் வேலைக்காரி வந்தாள்! அந்த வேலைக்காரி-தமிழ்நாட்டு தெருக்களிலே- தமிழ் நாட்டு கூடத்திலே - தமிழர்களுடைய மனதிலே இருந்த மூடநம்பிக்கைக் குப்பைகளை எல்லாம் பெருக்கி எறிந்தாள்!