உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலைப்புறா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 பாலைப்புறா

துவக்கிடலாம். சரிதானே டாக்டர் சந்திரா”

"இதுதான் என்னோட அபிப்ராயமும் டாக்டர்".

மாவட்ட சுகாதார அதிகாரி, அங்குமிங்குமாய் சுற்றிய டாக்டர்களையும், லேப் நிபுணர்களையும், காக்கி ஆசாமிகளையும் கைத்தட்டிக் கூப்பிட்டார். பிறகு கலைவாணியையும், மனோகரையும் பார்த்து, “இதோ ஆரம்பிக்கப் போறோம். ஒங்க ஆட்களை வரிசையாய் இந்த முதல் ரூம் பக்கமாய் நிற்க சொல்லுங்க!" என்று துரத்தினார். அவர்கள் போனதும், எல்லோருக்கும் ரகசியமாய்ப் பேசுவது போல், அதே சமயம் சத்தம் போட்டே பேசினார்;

"நம் தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஹெச்.ஐ.வி. இன்ஃபக்ஷன் பற்றி ஒரு ரிப்போர்ட் அனுப்பணுமாம். இப்போ அங்குமிங்குமாய் இருக்கிற இந்த நோய், எதிர்காலத்தில் எல்லோரையும் ஆட்டி வைக்கப் போகிற நோயாம். எப்படியோ போகட்டும். இதனால், இந்த முகாமிலேயே எய்ட்ஸ் கிருமி இருக்குதான்னு கண்டு பிடிக்கணும். இப்படி சுகாதாரத்துறை செயலாளர் சொல்லிட்டார். ஓசப்படாமல், கண்டுபிடிக்கணும். நாம் ரேண்டம் சாம்பிள் கொடுத்தால், சென்னையில் இருக்கிற கோட்டைக்காரன் அதை நூறால பெருக்குவான்".

"இங்கே எப்படி ஹெச்.ஐ.வி. டெஸ்ட் செய்ய முடியும்".

"நான் அப்படி செய்யச் சொன்னேனா? இப்படி ஒங்களை மாதிரி டாக்டருங்க, முட்டாள்தனமாய் பேசுறதாலதான், ஐ.ஏ.எஸ்.காரன் நம்ம மேல குதிரை ஏறுறான். பிளட்சுகர் டெஸ்ட்டுக்கு எடுக்கிற ரத்தத்தை வீணாக்காமல் வை. அதில் ஒருதுளியை ரொட்டேட்டர்லயோ, அது கொண்டு வராட்டால் ரசாயன முறையிலேயோ, டபிள்யூ பிஸு அதுதான் வெள்ளை அணுக்களாவும், சிவப்பு அணுக்களாவும் பிரி; வெள்ளை அணுக்கள், கனசென்டி மீட்டருக்கு எவ்வளவு இருக்குதுன்னு கணக்குப்பார்; கவுன்ட் எட்டாயிரமாய் இருந்தால்... எந்த டியூப்லே எடுத்தியோ அந்த டியூப் ரத்தத்தைக் கொட்டு. கவுன்ட் ஆறாயிரத்துக்கு குறைந்தாலோ, ஒன்பதாயிரத்துக்கு உயர்ந்தாலோ முகாம் முடிஞ்சதும் சம்பந்தப்பட்ட டியூப் ரத்தத்தை மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு வா. அங்கே மைக்ரோ பயாலஜிஸ்ட் பார்த்துக்குவார். ஒ.கே. இதையே மீண்டும் ஒலிபரப்பணுமா... சரி... சரி. உள்ளே ஒண்ணுக்கு இருக்க இடம் இருக்குதா".

"இல்ல..."

"அப்போ யூரின் டெஸ்ட்டை விடு. ஓ.கே., மை டாக்டர்ஸ்... கோ கோ நோயாளி இருக்கானோ, இல்லியோ... அந்த நோயாளிகள் எண்ணிக்கைய கூட்டுங்க. அப்போது தான், உலக சுகாதார நிறுவனக்காரன்கிட்ட காசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/46&oldid=1404992" இலிருந்து மீள்விக்கப்பட்டது