பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னு செஞ்சடை 3 கையில், “ புலியும் பசுவும் ஒரு துறையில் நீர் குடிக்க ' என்று வருவகைப் பார்க்கலாம். நல்ல அரசர்களுடைய ஆட்சியிலேயே அப்படி இருக்கு மால்ை அருளே உருவமாக உடைய இறைவன் சார்பிலே, பகையுடையார் பகை நீங்கி இருப்பதில் வியப்பு என்ன ?

உலகில் பகையென்றும் நட்பென்றும் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டு விட்டோம். ஆகையால் பகை வர்கள் ஒன்றுபட்டால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. சிவபெருமானுடைய செஞ்சடையிலே பிறையும் பாம்பும் இருக்கின்றன. பாம்புக்கும் திங்களுக்கும் பகை. முற்றிய திங்களே ராகு என்னும் பாம்பு விழுங்கும் ; அதல்ை பகை என்பது ஒன்று. திங்களும் பாம்பும் தம்முடைய இயற்கையால் மாறுபடுவன. யாவரும் காண வானத்தில் உலர் வருவது திங்கள்; பிறர் கண்ணிற்படாமல் வளைக்குள் ஒளிந்திருப்பது பாம்பு. கன்னுடைய தோற்றத் கால் யாவருக்கும் மகிழ்ச்சியைத் தருவது மதி: கன்னேக் கண்டால் படையும் கடுங்கும்படி செய் வது பாம்பு, வெண்ணிற் முடையது சந்திரன்; கரு நிறமுடையது பாம்பு. அமுக மயமாக இருப் பது சந்திரன், அகல்ை அமுக கிாணன் என்ற பெயர் அமைந்தது; பாம்போ நஞ்சு கொப்புளிப்பது. சந்திரன் ஒளி உருவமானது ; பாம்பு கிழலுருவ மானது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரண் டும் ஓரிடத்தில் இருப்பது அருமை. இருந்தால் அது வியப்பைத் தரும் காட்சி கான்.

  • ராகு கேதுக்களே நிழற்கோள் அல்லது. து கிரகம் என்று சொல்வார்கள். _:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/9&oldid=596875" இலிருந்து மீள்விக்கப்பட்டது